பக்கம்:முக அழகைக் காப்பது எப்படி.pdf/42

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


சக்தியை கொடுத்துக் கொண்டிருப்பதுடன், தேவையான போது எரிந்து, அதிக சக்தியையும் அளிக்கிற சூழ்நிலையையும் உண்டாக்கித் தருகிறது.

தோலைப்பற்றி இப்படி விரிவாகவும் விளக்கமாகவும் எழுதுவதற்குக் காரணம் என்னவென்றால், உடல் முழுதும் பரந்திருக்கிற தோல்பகுதிதான் முகத்திலும் மூடியிருக்கிறது.

உடலைச் சுற்றியுள்ள தோலுக்கும், முகத்தை மூடியிருக்கிற தோலுக்கும் கொஞ்சம் வித்தியாசம் இருக்கிறது. அந்த வித்தியாசம்தான் முக அழகை நிறைவாக்கிக் கொண்டிருக்கிறது. அப்படியென்றால் முகத்தோல் பற்றிய சூட்சமத்தை அடுத்துத் தெரிந்து கொள்வோம்.