பக்கம்:முக அழகைக் காப்பது எப்படி.pdf/45

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முக அழகைக் காப்பது எப்படி?

43


அதிகமாக காய்கறி உணவு பழவகைகளை உட்கொள்வதும். தினந்தோறும் தேகப் பயிற்சிகள் தொடர்ந்து செய்து வருவதும். வேண்டிய அளவுக்கு உயிர்க்காற்றை சுவாசித்து விடுவதும் தேவையான நேரம் தூங்கி எழுவதும், நல்ல தோல் அமைப்பை உண்டாக்கும். உருவாக்கும்.

நலம் காக்கும் தோல் பகுதியுடன் யாருமே உலகத்தில் பிறக்கவில்லை. பிறப்பில் இல்லை. யார்யார் தோலின் மேல் அக்கறை கொண்டு. கவனத்துடன் பராமரிப்புக் காரியங்களைப் பக்குவமாகச் செய்கின்றார்களோ, அவர்களே அழகாகத் தோன்றுவார்கள். கவர்சிகரமாக விளங்குவார்கள்.

உடல் முழவதும் பரந்திருக்கும் தோலினைப் பாதுகாக்க சுகமான முறைகள் உண்டு.

ஒவ்வொரு நாளும் தோலின் மேற்பரப்பை தூசியும் கண்ணுக்குத் தெரியாத நுண் கிருமிகளும் அழுக் கடைந்த பொருட்களும் தாக்கிக் கொண்டிருக்கின்றன.

அவற்றைக் கழுவி அகற்றாவிடில் தூசிகள் அழுக்காக மாறும் அழுக்குகள் பிசுக்காக ஒட்டும். பிசுக்குகள் கசடுகளாகிப் போகும். கசடுகள்தான். பல கஷடங்களையும் உண்டாக்குகிற கொடிய சக்திகளாய் உருக்கொள்கின்றன.

ஆகவேதான். அழுக்குகளைக் கழுவி தோலைத் தூய்மைப்படுத்துகின்ற செயலை தினந்தோறும்