பக்கம்:முக அழகைக் காப்பது எப்படி.pdf/48

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


பாதியளவு கொழுப்புத்திடம் கொண்ட ஒருவித திரவம். அது எண்ணெய் போன்று இருக்கும் தன்மை கொண்டது. இனி அந்த மூன்று வகை முக அம்சத்தைப் பார்ப்போம்.

1. வறட்சியான முகம் (Dry Skin)

முக அமைப்பைக் காட்டும் தோலானது, கொழுப்புத் திரவமானது கொஞ்சம் கூட முகத்தில் இல்லாமல் வறண்டு போய் உலர்ந்த மாதிரி வறட்சியாகத் தோன்றும் தன்மையில் இருப்பது.

ஏனென்றால். அந்தக் கொழுப்புத் திரவமான எண்ணெய் பசையுள்ள வளம் இல்லாமல் போய் இருப்பதுதான். அப்படி இருப்பதனாலேயே. அது சூரிய ஒளியால் பாதிக்கப்படுகிற தன்மை கொண்டதாக விளங்குகிறது.

ஆகவே, அப்படிப்பட்ட தோல் வறட்சியை ஈரப்பசையுள்ளதாக ஆக்கிக் கொண்டாக வேண்டும். எந்தெந்த முறையில் செய்து கொள்ளலாம் என்பதை அதற்குரிய ஆக்கபூர்வமான முறையை விளக்கும் பகுதியில் காணலாம்.

2. எண்ணெய் வழியும் முகம் (Oily Skin)

எண்ணெய் வழியும் தோற்றத்தை அளிக்கும் கொழுப்புச் சுரப்பிகள், கொஞ்சம் கூடுதலாக கொழுப்புத் திரவத்தைச் சுரந்து விடுவதால் ஏற்படுத்துகிற கோலம்தான் இது.