பக்கம்:முக அழகைக் காப்பது எப்படி.pdf/5

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



முன்னுரை

‘முக அழகைக் காப்பது எப்படி’ என்று இந்த நூலுக்கு உணர்வு பூர்வமாக ஒரு பெயரைச் சூட்டியிருக்கிறேன். மூன்றே வரிகளில் சொல்லி விடலாம். இதற்குப் போய் இவ்வளவு பெரிய புத்தகமா என்று சிலர் கேட்கிறார்கள். எல்லோரும் நினைப்பது போல, முகம் ஒரு மிகச் சாதாரணமான உறுப்பல்ல.

முகம் என்பது உலாவருகின்ற சுகத்தை உலகுக்குக் காட்டுகிற தொலைக் காட்சிப் பெட்டி. அகத்தில் ஆரவாரமிடும் எண்ணங்களின் அலையோட்டத்தை, நிலைப்பாட்டினை வெளியிலே முகந்து வந்து கொண்டு காட்டுகிற வியப்பூட்டும் நிலைக்கண்ணாடி.

ஒருவரைப் பார்த்தவுடன் வணக்கம் செய்யத் தூண்டுவதும், மரியாதை செய்ய வைப்பதும். அவரது முகத்தைப் பார்த்த பிறகுதான்.

பார்த்தவுடனே பிடித்துப் போய்விட்டால் அதை முகம் என்கிறார்கள். கொஞ்சம் எரிச்சலோடு காணப்பட்டால் மூஞ்சி என்கிறார்கள். மூஞ்சி என்றால் கோணல் முகம், தட்டை முகம் அல்லது கோண முகம் என்று கூடச் செல்லலாம்.

முகத்திலே அழகும், கலையும், கவர்ச்சியும் இருக்க வேண்டும்.

முகத்திலே அழகில்லாமல், எந்தவிதக் களையும் இல்லாமல், எந்தவிதக் கவர்ச்சியும் இல்லாமல் போனால் அந்த முகத்தைப் பார்த்தவுடன் அதை முகரக் கட்டை