பக்கம்:முக அழகைக் காப்பது எப்படி.pdf/57

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முக அழகைக் காப்பது எப்படி?

55


3. கொழுப்பு சுரப்பிக் கட்டி (Acne)

தோலுக்கு அடியிலுள்ள கொழுப்பு சுரப்பி சுரக்கின்ற கொழுப்பு திரவமானது. எண்ணைப் பசையுள்ள ஒருவித திரவம். முகத்தின் தோலின் அடிப்பாகத்திலிருந்து மேலோங்கி. பருக்களாக நுண் துவாரத்தில் வந்து வெளியே முகப் பரப்பில் பரவி நிற்கிறது.

அப்படி வருகின்ற எண்ணைப் பசை திரவத்தால் நுண் துவாரங்கள் மூடப்படுகின்றன. அதனால் வெளியே வரமுடியாமல் அந்தத் திரவம் தங்கி நிற்கிறது. அப்படி தேங்கி நிற்கின்ற பகுதியானது படை போல் முதலில் தொடங்கி பிறகு ‘பாக்டீரியா’ போன்ற நுண்கிருமிகளால் பாதிக்கப்படுவதனாலேயே அங்கேயே வீங்கி இப்படி கட்டியாக மாறிவிடுகிறது. இதைத்தான் கொழுப்புச் சுரப்பிக் கட்டி என்கிறோம்.

கொழுப்பு சுரப்பிக்கட்டி என்பது முகத்தோலிலே பாதிப்பை ஏற்படுத்துகின்ற நீரை உருவாக்குவதாகும். கடுமையாக ஏற்படுகின்ற கொழுப்புக் கட்டிகள். கொஞ்சம் கொஞ்சமாக ஓரிடத்தில் தொடங்கி. முகம் முழுவதும் பரவி கழுத்து, தோல் பகுதி, மார்புப் பகுதி மற்றும் முதுகுப் பகுதியைப் பாதிக்கின்ற அளவிலே விரிந்து சென்று விடும். இவ் விதமான கொழுப்புக் கட்டிகள் தானாகவே உடைந்து விடுகிறபோது. அதிலிருந்து வெளிப்படுகின்ற எண்ணைப் பசை உள்ள திரவம், மற்றும் பாக்டீரியா நுண் கிருமிகள் சேர்ந்து கொண்டு. தோல் திசுக்களைச் சுற்றிலும் பாதிக்கின்ற அளவுக்கு கடுமையாகி விடுகின்றன. இப்படி வருகின்ற