பக்கம்:முக அழகைக் காப்பது எப்படி.pdf/6

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்கிறார்கள். உணர்ச்சி உள்ள முகத்திற்கு உணர்ச்சியற்ற மரக்கட்டையைக் கொண்டு வந்து உவமைகாட்டுகிறபோது கேட்கின்ற நமது மனம் கொந்தளிக்கிறதல்லவா!

முகத்தை அழகாக வைத்துக் கொள்வது ஒருகலை. முகத்தைப் பூரணப் பொலிவாகப் பாதுகாப்பது, அது பெரிய ராஜ அம்சமான தந்திரம். அதாவது தன்+திறம் அதுதான் தந்திரம். உங்கள் முக அழகைப் பாதுகாக்க இந்தச் சிறிய நூல் உதவுகிறது என்றால், அது நான் மேற்கொண்ட பெருமுயற்சிக்குக் கிடைத்த பெரிய பரிசுதான்.

அழகு என்ற பொக்கிஷத்தை யார் வேண்டுமானாலும் தேடலாம். பெறலாம். அதற்குச் சீரான இலட்சியம், இடைவிடா முயற்சி, தூயபழக்க வழக்கங்கள் வேண்டும். இவையெல்லாம் உங்களிடம் ஏற்கெனவே இருக்கின்றன.

எனது நூல் உங்கள் முக அழகுக்குப் பக்கபலமாக இருக்கும். பக்கத்துணையாக இருந்து வழிநடத்தும் என்ற நம்பிக்கையோடு உங்களிடம் ஒப்படைக்கிறேன். நீங்கள் வசந்தகால வாழ்வை நோக்கி, வெற்றிப்பயணம் அடைய வாழ்த்துகிறேன்.

'லில்லி பவனம்'

என்றும் அன்புடன்

சென்னை-600 017

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா