பக்கம்:முக அழகைக் காப்பது எப்படி.pdf/72

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


2. உங்கள் தலைமுடிக்கு அந்த குறிப்பிட்ட ஷாம்பு ஒத்துவருகிறதா என்பதை நன்கு தெரிந்து கொண்டு பயன்படுத்த வேண்டும்.

3. உங்கள் தலை முடியை நன்றாகத் தேய்த்து கழுவிச்சுத்தப்படுத்த வேண்டும்.

4. குளித்த பிறகு தலை முடியை நன்றாகக் காயவிடுவதுபோல தலைமுடியை உலர்த்துதல் நல்லது.

5. உங்கள் தலை ஈரமாக இருக்கும்பொழுது துண்டால் அதிவேகமாக, கடுமையாகத் துவட்டக் கூடாது. முடி அந்த நேரத்தில் பலஹீனமாய் இருப்பதால் கொத்துக் கொத்தாகப் பிய்த்துக் கொண்டு வந்துவிடும். மெதுவாக, மென்மையாகத் துவட்டவும்.

6. மிகவும் நெருக்கமான பற்கள் உள்ள சீப்பால் சீவாமல், இடைவெளியுடன் இருக்கும் சீப்பால் இதமாகச் சீவி விட வேண்டும்.

2. கண்கள்:

முகத்திற்கு அழகு விழிகள்தான். விழிகள் இரண்டும் முகத்தின் அழகைக் கூடுதல் கவர்ச்சியாகக் காட்டி விடுகின்றன. உடலிலே இருக்கும் உறுப்புக்கள் அனைத்திலும், மிக நுண்ணியதான, உணர்வு பூர்வமாக அமைந்த சிறப்புப் புலன்களாக, உலகத்தை ரசிக்க மட்டுமல்ல, உபத்திரவம் எதுவுமில்லாமல் நடமாடுவதற்கு உதவியாக அமைந்திருப்பதும் இந்தக் கண்கள்தான். கண்களைப் பாதுகாப்பதற்கு உடலின் செயல்பாடுகள் கெட்டிக்காரத்தனமாகச் செய்து வைக்கப்பட்டிருக்கிறது.