பக்கம்:முக அழகைக் காப்பது எப்படி.pdf/74

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


கண்கள் பிரகாசமாகவும். பிரமாதமாகவும் இருக்க வேண்டுமென்றால் நீங்கள் கண்களைக் கருத்துடன் கவனித்துக் கொள்ள வேண்டும். நீங்கள் முக அழகைக் காக்கிறபொழுது விழிகளை மறந்து விடாதீர்கள்.

கட்டாயமாக ஒருவர் எட்டு மணி நேரம் தூங்க வேண்டும் என்பது உடலுக்கு ஓய்வுதர மட்டுமல்ல. களைத்துப்போன உறுப்புக்கள் மீண்டும் புத்துணர்ச்சி பெறவேண்டும் என்பதற்காக மட்டுமல்ல. கண்களுக்கு ஒய் வையும். விழிப்பிலிருந்து ஒரு மாற்றத்தையும் கொடுப்பதற்காகத்தான். கண்களுக்கு ஓய்வு தரவில்லை என்றால் கண்கள் தளர்ச்சியடைந்து, ஒருவித எரிச்சலை ஏற்படுத்தித் தலை வலியையும் உண்டாக்கிவிடுகிறது. அதிக நேரம் கண்களைப் பயன்படுத்துகிறபோது பார்வை நரம்புகளுக்குப் பாதிப்புகள் ஏற்படுகின்றன. நீண்ட நேரம் படிக்கின்ற பொழுது பத்து அல்லது பதினைந்து நிமிடங்களுக்குக் கண்களை மூடிக் கொண்டு ஓய்வு கொடுத்தால் கண்கள் மீண்டும் புத்துணர்ச்சியோடு செயல்படத் தொடங்கும்.

உங்கள் கண்கள் அதிகமாக களைப்படைந்தாலும், அல்லது அதிக வெளிச்சத்தில் எரிச்சல் அடைந்திருந்தாலும், கண்களின் வெள்ளைப் பகுதி முழுவதும் இரத்தச் சிவப்பாகிவிடுவது உண்டு. காற்று அடித்த புழுதியாலும், அல்லது தெளிவற்ற சுற்றுப்புறச் சூழ்நிலையாலும் வெண் பகுதி எரிச்சல் அடையும் பொழுது நீங்கள் கண்களைத் தேய்க்காதீர்கள். நீங்கள் அழுத்தித் தேய்க்கின்ற பொழுது, பிராணவாயு இயக்கிக் கொண்டிருக்கிற மெல்லிய இரத்தக் குழாய்கள்