பக்கம்:முக அழகைக் காப்பது எப்படி.pdf/78

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


குறும்பி. கட்டியாகி திரட்சியாக இருக்கிறபோது காதுகேட்காமல் மந்தமாகக் கூட இருக்கும். அப்போது நீங்கள் அந்தக் குறும்பியை எடுப்பதற்காகக் குச்சியையோ, ஊக்கு, ஊசிபோன்ற பொருள்களையோ உள்ளேவிட்டுக் குடையக் கூடாது. அப்படிச் செய்கிறபோது காதின் செவிப்பறைகள் குத்திக் கிழிக்கப்பட்டுவிட்டால் காலமெல்லாம் நீங்கள் செவிடர்களாகத் தான் வாழ நேரிடும். எனவே குறும்பியை நீக்க நல்ல டாக்டரை அணுகவும்.

காது குடைவதால் மட்டும் செவிப்பறை கிழிந்து போவதில்லை. இடி இடிப்பது போன்ற சத்தத்தைக் கேட்கும்போது கூடச் செவிப்பறை கிழிந்து நிரந்தரமான செவிடர்களாக ஆக்கியிருக்கும் வரலாறு நிறைய இருக்கிறது.

விஞ்ஞானிகள் ஒலியின் சத்தத்தின் அளவை பகுத்துப் பார்த்திருக்கிறார்கள் பகுத்துப்பார்த்த அந்த முடிவிற்கு டெசிபெல் (Decibal) என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள்.

ஒருவர் வாய் வழியாக, முணுமுணுக்கிறபொழுது ஏற்படுகிற சத்தத்தின் அளவு 20 டெசிபெல்.

ஒரு டெலிபோன் மணியானது அடித்து ஓசையெழுப்புகிறபோது அந்த அளவு 70 டெசிபெல்.

ஒரு மோட்டார் சைக் கிள் புறப்படும்போது அலறுகிற ஒலியின் அளவு 90 டெசிபெல்.