பக்கம்:முக அழகைக் காப்பது எப்படி.pdf/80

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


உள்ளதாக ஆக்கி வைத்திருக்கின்றன. அந்தப் பல்லைச் சுற்றிதான். ஈறு, பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்டு நாடி நரம்புகளின் ஆணிவேராக இருக்கிறது.

உங்கள் பற்கள் பலவிதமான அமைப்புக்களைக் கொண்டிருந்தாலும். அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான வேலையைச் செய்து வருகின்றன. பற்களின் அமைப்புப் பற்றித் தெரிந்து கொண்டீர்கள். இனி அவற்றைப் பாதுகாக்கும் முறைகளையும் அறிந்து கொள்வதோடு மட்டுமல்ல. கட்டாயமாகப் பின்பற்றவும் வேண்டும். பாதுகாக்கும் முறைகள் சிலவற்றைப் பார்ப்போம்.

1. வருடத்திற்கு இரண்டு முறையாவது பல்வைத்தியரிடம் சென்று பரிசோதித்துக் கொள்வது நல்லது.

2. ஒரு நாளைக்குக் காலையிலும், இரவிலும் இரண்டு முறையாவது பற்களைத் துலக்க வேண்டும்.

3. ஆலமரத்தின் விழுதும், வேப்பமரத்தின் குச்சியும் பல்துலக்கச் சிறந்தவை என்று நமது முன்னோர்கள் சொன்னார்கள். முடியாத நேரத்தில், மணல், செங்கல், கரித்துள்கள் போன்றவற்றைப் பல்துலக்கப் பயன்படுத்தினார்கள். பிறகு மென்மையான பற்பொடி வந்தது. இப்போது குளோரைடு கலந்து பற்பசைகள் பல வண்ணங்களில் வந்து கொண்டு இருக்கின்றன.

நீங்கள் எந்தப் பற்பசையைப் பயன்படுத்தினாலும். குளோரைடு இருக்கிறதா என்பதைக் கவனித்து வாங்கவும்.