பக்கம்:முக அழகைக் காப்பது எப்படி.pdf/87

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முக அழகைக் காப்பது எப்படி?

85


இருப்பவனை என்ன சொல்வது? துரோகி என்றுதானே சொல்லவேண்டும். அவன் தனக்குத்தானே துரோகியாவ தோடு சமுதாயத்திற்கும் துரோகியாகிவிடுகிறான்.

ஆகவே, வாயை அடக்கக் கற்றுக் கொள்ளுங்கள். இப்படிச் சொல்வது பேச்சைக் குறைத்துக் கொள்ளுங்கள் என்றும், கண்டதைத் தின்று வயிற்றைக் கெடுத்துக் கொள்ளாமல் அளவோடு உண்டு, வளமோடு வாழுங்கள் என்பதற்காகத்தான் வாயை அடக்கக் கற்றுக் கொள்ளுங்கள் என்றார்கள்.

வாய் என்பது முகத்திற்கு அழகு சேர்க்கும் ஒரு உறுப்பு என்பதை நாம் உணர்ந்து இருந்தாலும். அதுவே நம் நல் வாழ் விற்கும் வழியாக அதாவது வாயிலாக இருக்கிறது என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

செந்தமிழைச் சொன்னால் வாய் மணக்கும். பற்பல ஜீவன்களைக் கொன்று தின்றால் வாயாமணக்கும். வாய் நாறும். வாய் திறந்தாலே துர்வாடை வீசும்.

ஆகவே, வாய் ஒருவழி. அது எதையும் உட்கொள்ளும். எதையும் வெளிப்படுத்தும். அதைச் சுத்தமாக வைத்துக் கொள்ளப்பழகிக் கொள்ளுங்கள்.

6. மூக்கு:

முகத்தின் அழகிற்கு மூக்கும் ஒரு முக்கியமான உறுப்பாகவே இருக்கிறது. சவாலாக ஒரு காரியத்தில் ஈடுபட்டுத் தோல்வியைச் சந்திக்க நேரிட்டால், “என்னப்பா மூக்கு அறுபட்டாயா?” - என்று சிலர் கேட்பதுண்டு. மூக்கு அறுபட்டதற்கு இதிகாசத்திலே,