பக்கம்:முக அழகைக் காப்பது எப்படி.pdf/94

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


போன்ற நரம்பணுக்கள் தொடர்ந்து பணிசெய்து சக்தியை அளிக்கிறது. இந்த இரசாயன மாற்றத்தால் எழும் அடிப்படை சக்தியை உடல் வெப்பத்திற்காகவும். வேலைக்காகவும் மாற்றிக் கொள்ளும் அற்புதப் பணியைத்தான் உடல் ஒப்பற்ற முறையில், நொடிக்கு நொடி செய்து கொள்கிறது.

உணவு உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது. உழைப்பால், அன்றாட அலுவல்களினால் உடைந்துபோன செல்களைப் புதுப்பித்தும், புதிதாகப் படைத்தும் உதவுகிறது. செல்களுக்கிடையே செழிப்பினை உண்டாக்க, ஹார்மோன்ஸ், என்சைம் போன்ற சக்திகளைப் பிறப்பிக்க உற்சாகம் ஊட்டுகிறது. அப்படிப்பட்ட அனைத்து சக்திகளும் மிகுந்த உணவினையெல்லாம் கார்போஹைடிரேட், கொழுப்பு, புரோட்டின், வைட்மின் என்று வகைப்படுத்திக் காட்டுகிறார்கள்.

கார்போஹைடிரேட் எனும் மாவுச் சக்தியானது அரிசி, கோதுமை போன்ற எல்லாத் தானிய வகைகளிலும், உருளைக் கிழங்கு மற்றும் எல்லா இனிப்புப் பண்டங்களிலும் பெருவாரியாகக் கிடைக்கிறது. இந்த மாவுச் சக்தியானது சர்க்கரை ஸ்டார்ச்சு என்று இருவகைப்படும்.

உணவில் அதிகமாக மாவுச்சக்தி சேர்ந்து விடுமானால் தேவைக்கு செலவானதுபோக, மீதியைக் கொழுப்பாக மாற்றி உடல் சேகரித்து வைத்துக் கொள்கிறது. இவ்வாறு அதிகம் சேரச் சேரத்தான், உடல் சற்று கொழுத்துக் குண்டாகிவிடுகிறது.