பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உன்னுருவே தோன்றுதடி எண்சீர் விருத்தம் 1

உள்ளத்தில் படிந்துவிட்டாய் அழகுப் பாவாய்;
உணர்வுடனே கலந்துவிட்டாய் தமிழின் பாட்டாய்;
கள்ளக்கண் பார்வையிலே சொக்கி விட்டேன்;
கரைபுரண்டு வருகின்ற காத லாற்று
வெள்ளத்தில் புணையாவாய் என்றே உன்னை
வேண்டியதை மறுத்தனையே! உயிர்நிலைக்கக்
கள்ளைத்தான் நம்பினும் அம் மதுநி றைந்த
கைக்கிண்ணத் துன்னுருவே தோன்றக் கண்டேன்

2 கச்செதிர்க்கும் உன்மார்பு கலக்க வில்லை;
காட்டுமலர்ச் சிரிப்புந்தான் அசைக்க வில்லை;
பச்சைமயில் சாயலுக்கும் பதைத்தே னல்லேன்:
படியவைத்த துன்னிசையோ அன்றே; உன்றன்
இச்சைமிகும் பார்வையில்தான் கட்டுண் டேன்நான்
என்னாசை மறுத்தனேயே! என்றன் வாழ்வுக்
கச்சாணி அனையவளே! சோலே செல்லின்
அங்கெல்லாம் உன்னுருவே தோன்றக் கண்டேன்

68