பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிற்றார்ச் செலவு எண்சீர் விருத்தம் I 1lட்டணத்தில் என் மனைவி பிறந்து வாழ்ந்தாள்: பகலுணவு முடித்துப்பின் படுத்தி ருந்தேன் தட்டெடுத்து வெற்றிலையை மடித்தெ டுத்துத் தந்தின்பம் சேர்த்திருந்தாள், பாளை நீக்கி விட்டெழுந்த நகைஉதட்டைப் பற்றி 'நாளே விடியலுக்குள் என்னுார்க்குச் செல்வோம்” என்றேன் "கட்டழகி எனச்சொல்லிக் கட்டி முத்தம் கணக்கின்றித் தந்தாலும் வாரேன்” என்ருள் 2 'ஏன்'என்றேன் பட்டிக்கா டென்று ரைத்தாள் 'என்னை உனக் களித்துள்ள அன்னை வாழும் தேனெனவே இனிக்கின்ற என்றன் ஊரைத் தி.துரைத்தாய் அதனலத்தை உணரா திங்கே கானுண்டோ? உணவுவிளை களங்தான் உண்டோ? காக்கின்ற தாயகத்தைக் காண எண்ணி நானுன்னே அழைக்கின்றேன் வருக !' என்றேன் "நடப்பதற்கு முடியாதே' என்ருள்; பின்னர் 81.