பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொழிலாளி எண்சீர் விருத்தம் I ஆதிச்சடக்கிக் கடலகத்தே மூழ்கி நல்ல முத்தெடுக்கும் தொழிலாளி வாழ்க்கை தன்னில் மூச்சிருக்க வேண்டியகல் வசதி இல்லை, முதலாளி பஞ்சனேயில் கொஞ்சும் மஞ்சள் பூச்சுடைய மங்கையரை அழகு செய்யப் பூமிக்குள் அஞ்சாது நுழைந்து மின்னப் பாய்ச்சுகின்ற தங்கத்தைக் கொடுக்கின் ருனே பாவம்,அவன் அங்கத்தில் ஒன்றும் இல்லை! 2 ஆலேயிலே ஆடைகளை ஆக்கு கின்ருன் ஆலுைம் அன்னவனுக் காடை இல்லை காலையிலே உழைக்கின்ருன் விதைக்கின் ருன்நெற் களஞ்சியத்தை கிறைக்கின்ருன் உடல்வ ருந்தும் வேலையிலே குறைவில்லை பசியை நீக்க வேண்டியகல் உணவெதுவும் இல்லை! இல்லை! மாலையிலே உளம்நொந்து செல்லு கின்ருன் மறமிக்க தொழிலாளி கிலேமை நன்ருே? 骨 103