பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 என்றுரைத்தாள்; பெண்மயிலே! தமிழில் ஊறும் இன்பங்லே கண்டவர்கள் இந்த ஒன்றே நன்றென்பர்; நான் கூட அப்ப டித்தான் நடையழகி! நானுன்னே மணந்து கொண்ட அன்றுன்பால் அழகிளமை கிறையக் கண்டேன் ஆண் பிள்ளை ஒன்றுபெற்று விட்ட பின்னர் இன்றுளதோ அவ்விளமை? ஆத லாலுன் இன்பத்தும் சிறுகுறைவு இருத்தல் உண்மை 4 மனிதரினம் முதன்முதலில் பேசக் கற்ற மாண்புயர்செந் தமிழனங்கோ என்ருல், இன்பம் கனிதெலுங்கு மலையாளம் துளுவம் இன்னும் கன்னடமாம் எனுமக்கள் நான்கு பெற்றும் தனியிளமை குன்றவிலே தளர்வும் இல்லை தலைச்சிங்தா மணிசிலம்பு மேக லேப்பூண் கனியழகு பொலிவுபெற மனத்தை ஈர்க்க நடக்கின்ருள் சிரிக்கின்ருள் அந்த கங்கை 5 ஆதலினல் தமிழின்பம் உயர்ந்த தென்ருர் அதற்கவரை வெறுத்துவிடல் அழகோ ? என்றன் மாதரசே எனவுரைத்தேன், போங்க ளத்தான் மறைமொழியால் கேலிஉரைக் கின்றீர்!’ என்ருள்: "காதலியே கேலியில்லே தமிழ்க வைத்தால் கவலைஎலாம் பறக்குதடி ! தளர்ச்சி நோயும் ஏதடி?என் இன்னமுதே! என்றன் உள்ளம் இன்பத்துள் மூழ்கு தடி!' என்று சொன்னேன்; 136