பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன்றே செய்தனர், காடும் திருந்தும் 20 மாணவர் திருந்தின் மாகிலம் தெளியும் காணலாம் கலமெனக் கருதிய பெரியார் மனத்தகத் தெழுந்தது மாணவர் மன்றம்: நினைத்தவர் யாரெனின் நிகழ்த்துவன் கேண்மின்! உழைப்பின் உருவம், உள்ளம் விரிகடல், 25 களைப்பும் சலிப்பும் காணுச் செம்மல் நடுநிலை பிறழா நல்லவர், நாட்டில் கெடுங்லே காணிற் கிளர்ந்தெழு வீரர், மனிதருள் முத்து, மயிலை முத்து எனும்பெயர்க் கிழவர், எமக்கும் கிழவர், Յ0 நிறுவிய மன்றம் நெடுநாள் வாழிய! பெறுமுயர் தாயெனப் பேணுக இதனே! தொடர்புறும் மாணவர் தாயவ ராகி அடலே றென்ன ஆண்மைமீக் கூர்ந்து மொழியும் நாடும் முந்துறக் கண்டு Ꭶ5 வாழ்க வாழ்கென வாழ்த்துதும் யாமே.

188