பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31 கவிஞர் தருகிருர். தன் மகனே மிக அன்புடன் பேணும் ஒரு தாய், மருமகள் வந்தவுடனே, அவள் மீது கொள்ளும் வெறுப்புணர்ச்சியால் பெற்ற மகனையும் புறக் கணிக்கின்ருள் அல்லவா? அதற்கு இதை ஒப்பிடுகிருர் ஆசிரியர். வளரக் கெடும் என்ற தலைப்பமைந்த இப் பாடல் புதுமை மிக்க, ஒப்பற்ற கற்பனையாகும். ஒர் ஆங்கிலப் பேரறிஞர், 'மனிதனின் உணர்ச்சிகளை ஆட்சி செய்யும்.அரசர்கள்,' என்று கவிஞர்களைக் குறிப்பிடு Gopi. (“Poets are the rulers of men's spirits”—J. C. Shairp.) தமிழ் முடிசூடிப் படிப்பவர்தம் மன அரியணை ஏறி உணர்ச்சிகளே ஆளும் பாட்டுத் திறத்தாலும், அதைக் கொண்டு வையத்தைப் பாலிக்கும் திறத்தாலும் இவரும் முடியரசராகவே திகழ்கின்ருர். ஆம், காதலியைப் பற்றிய கவிதையைப் படிப்ப வனைக் காதலகை, குழந்தையைப் பற்றிய பாவை இசைப் பவனேத் தந்தையாக மொழி பற்றிய பாடல்களில் ஈடுபடு பவனேத் தமிழனுக பண்புதரும் பாட்டுக்களே ஒதுபவனே மனிதனுக உயர்த்தி கல்லாட்சி புரிகின்ருர். இப் பேரிலக்கியத்தால் நாம் பெறும் பயன்கள் இத்தனே யென்ருல், இவை போதாவா? தமிழண்ணல்