பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 இனிமைமிகு தமிழ்மொழியைத் தாழ்த்திப் பேசின் எதிர்த்தழிக்கும் அவன்கவிதை; காதற் பாட்டும் கனிந்திருக்கும்; பகையஞ்சா வீரங் காட்டும்: * - கலப்பை எனும்படையுடையார்உழைப்பில்லார்க்குக் குனிந்துதரும் நிலையொழிக்கும்; உணர்ச்சி ஏற்றிக் கொடுஞ்செயலே மடமையினைத் தாள் தாள் ஆக்கும் பனிமழையிற் குயில்போல வாய டைத்துப் பாடாமல் இருக்கின்ருன் ஏனே? ஏனே? 4 சிந்தனையைக் கூர்விழியிற் றேக்கிக் கையிற் செவிபொருந்தக் கன்னத்தைச் சேர்த்து கெஞ்சம் சொந்திருக்கும் எண்ணமெலாம் கவிதை யாக்கி நோவொழிந்தான்; கவிதையினைச் சட்டைப் பையில் தந்துவைத்தான்; அவன்மனேயாள் நோக்கி அந்தத் தாள் விரித்து மலர்விழியின் இதழ்வி ரித்து வெந்திருக்கும் மனம்விரித்த பாடல் தன்னே விளம்புதற்குச் செவ்வாயின் இதழ்வி ரித்தாள் 5 'மனையாளைப் பிரிந்திருப்பேன் உன்னே ஒர்நாள் மறந்தறியேன் அன்றிலென காமி ருந்தோம் எனே மறந்து பிரிந்தனையே! காண்போர் எல்லாம் இரட்டையரென்றெடுத்துரைக்கஇணைந்தி ருந்தோம் தினேயளவும் திதறியேன் உன்றன் வாழ்வே தினமுநினைந் திருக்கின்றேன் என்பால் தோன் மனமுறிய என்ன குறை கண்டாய் தோழா! மாய்கின்றேன் மாய்கின்றேன் அறிவாய் கண் பா! 195