பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னேர் சொத்தாம் முத்தமிழ் நாட்டின் எல்லேகள் போயின. ஏன் எனக் கேட்டிலே! இல்லை உரிமை என எண் ணினையோ? பகலிற் கொள்ளை பாராய்! உலகம் நகுதற் பொருட்டோ நற்றமிழ் மகனே! மொழியும் நாடும் முன்னேர் சொத்தாம் அழியா வண்ணம் அவர்வழி வந்தோர் காத்தல் வேண்டும்; காக்கும் உரிமை மூத்த இம் மண்ணில் முளைத்தோர் யார்க்கும் உண்டென உணரின் ஒழியும் தீமை பண்டைய கிலேமை பாரில் வாய்க்கும்; நிற்கஎன் தோழா! வாயிலில் கின்காய் நிற்க எவ்வணம் நிகழ்ந்தது திருட்டு? மொழிக’ என்று மொழிந்தன ன் நண்பன்: ஒழிக.அந் நாயே ஒழிக.அந் நாயே நன்றி மறந்தது நன்றி கொன்றது காட்டிக் கொடுக்கும் கயமை மிகுந்தது வீட்டின் ஒருபுறம் விரும்பும் உணவைப் போட்டுளார் திருடர் புசித்தது நாய்தான் கடமை மறந்தது களவும் நிகழ்ந்த(து) உடைமை யிழந்தேன் எனநான் உரைத்தேன் "நாயினைத் திட்டினை நம்மவர் பண்பும் ஆயின் அன்னதே! அதற்கென் செய்குவை? பதவி யுணர்வைப் பார்த்ததும் குழைந்து சதமென எண்ணிச் சார்ந்து திருடர்க்கு வழிவகை செய்வர் பழி.என நாணுர் இழிதொழில் புரிந்தும் ஏற்றம் பெறுவர் தாயைப் பழிப்பர் தருக்குடன் நிற்பர் காடும் மொழியும் கமதென எண்ணுர் 202 30 40 45