பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என வாங்கு, வெய்துயிர்ப் புறுங்கால் விம்மிய மார்பகம் கண்டனள் களித்தனள் தண்டொடுங் திருகிக் கொண்டனள் அம்முகை, கொவ்வைக் கனியைச் 30 சுவைத்தனள் அதுதான் துணையிதழ்க் கொவ்வாத் தகைத்தென உமிழ்ந்தனள், சாயல் நடைஎழில் காணலும் மயிலொடு அன்னங் கலங்கின பானெலி கேட்டுப் பைங்கிளி குயிலொடு நாணின. இவ்வணம் கங்கை நின்றுழி, 35 அவனும் அவளும் தொடுக்குங் தெரியல் தோளினன் சுடரொளி விடுக்கும் பொற்பூண் விடலை பலர்தொழும் கடவுட் கோலக் காளை ஒருவன் தடமலர்ச் சோலையுள் தையலேக் கண்டனன் கண்டார்ப் பிணிக்கும் காரிகை எழில்கலம் ᎦᏴ0 உண்டான் விழியால், உலகின் அழகெலாம் ஒருருக் கொண்டிங் குற்ற தோவெனத் திகைத்து நின்றனன், கிலத்தை நோக்கினள், பதைத்தனள் நிமிர்ந்தாள், பார்வையைத் திருப்பினன், ஈரிரு விழிகளும் மாறி மாறி 35 ஒரிரு முறையால் ஒன்றிக் கவ்வின; "நன்னுதல்! யார்?ே” என்னலும் நாணினள் பின்புறம் தொங்கும் பின்னல் கண்டவன். என்னுயிர் பின்னினே எழில்முகங் காட்டி நின்வர லாறுரை நேரிழாய்!” என்னலும் 40 சண்பை நகரெனச் சாற்றும் இவ்வூர்ப் பண்பினன் வேதப் பார்ப்பன முதுமகன் அழலோம் பாளன் அன்பினன் கோசிகன் 14