பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| | 6 குளிர்மிகுந்து நடுக்கமுறின் மனந்தளர்வாள் கொணர்ந்திடுவாள் ஞாயி றென்னும் ஒளிநெருப்பை குளிர்காய்வேன், அதன்பின்னர் மலர்க்காட்டுள் ஒடி ஒடி நளிமலருள் நிறைமணத்தை வாரிவந்து நான்மகிழ உடலிற் பூச அளிதென்றல் உருவோடு வருவாள்தன் அன்பினேத்தான் உரைத்தல் ஆமோ ? 7 படித்திடுக எனச்சொல்லிக் குயிலினங்கள் பசுங்கிளிகள் இவற்றைத் தந்தாள் ; பிடித்தவற்றைப் பார்க்கையிலோர் அறங்கண்டேன்; 'பேசுமொழி சொந்த மேயாம் அடுத்தவற்றின் குரலல்ல யுேமுன்றன் அனேமொழியால் பேசு 1 பாடு !! தடுப்பவர்யார் ? என்றன. அவ் வேடுகள்தாம் தாயேதாய் மொழியே வாழ்க ! 8 விண்ணரங்கிற் கருமுகிலாம் திரைக்ேகி, விதவிதமாய் வானம் பாடி பண்ணிசைக்க, ஒளிவீசிப் புடைசூழும் பல்வகையாம் மீனப் பெண்கள் கண்சிமிட்டி உடனட, முழுநிலவுக் காரிகையும் கடனம் ஆட மண்ணகத்து மகவெல்லாம் களிகொள்ள மனம்வைத்தாள் என்றன் அன்னை 26