பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

மீன்பிடித்துக் காதலன்தான் மீள்தல் கண்டு
மீள்வாரோ? மீளாரோ? எனத்த ளர்ந்த
மான்படித்த பார்வையினாள் அகத்துள் பொங்கும்
மகிழ்ச்சிஎலாம் வெளிக்காட்டும் முகத்தி டத்தே
தான்நடடித்தாள் எழிலணங்கு; தந்தை முன்னர்த்
தள்ளாடி நடந்தோடி அப்பா ! என்று
தேன்வடித்த சொல்லாலே குழந்தை கூவத்
திரும்பினவன் முகத்தகத்தும் எழிலைக்கண்டேன்

7


கொடிதாங்கி உரிமைப்போர்க் களத்துச் சென்ற
குமரனவன் உயிர் நீங்க ஆள்வோர் தந்த
அடிதாங்கித் தலையிழந்து கொட்டும் செந்நீர்,
அடிமைஎனும் சிறுமையினை அழிப்பான் வேண்டி
நெடிதோங்கும் பிறனாட்ச்சி தொலைக்கும் போரில்
நின்றிருந்த பெரியோன்தன் அகன்ற மார்பு
வெடிதாங்கிச் சிந்துகின்ற குருதி, யார்க்கும்
விளங்காத எழில்காட்டக் கண்டேன் கண்டேன்

8


"மன விருளை அகற்றிடுக சிந்தித் தாய்க!
மறைப்பின்றி உரைத்திடுக ! இங்கன் செய்யின்
நனவுலகில் மனிதரென வாழ்வோம் !" என்று
நவின்றவனை "அடைத்திடுக கொடுஞ்சி றைக்குள்எனவுரைத்துக் கொடுநஞ்சைக் கொடுத்தான் வேந்த
"எனதுயிரிற் பெருங்கொள்கை விடுதல் ஏலேன்
சினவுயிரை விடுதல்எனக் கெளிதாம்" என்று
செப்பிஅவன் குடித்தெறிந்த கிண்ணத் துள்ளே

30