பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6 திருடியும் பழங்கருத்தைத் திருப்பியும் எழுதிப் பிழைக் கிறர்கள் இந்தக் 'கவிதா மேதை'கள்! பாரதியும், பாரதி தாசனும், கவிமணியும் பிறந்த நூற்ரறுண்டிலே இத்தகைய 'கவிதா விற்பன்னர்'களும் பிறந்து தருக்கித் திரிவது கண்டு வியப்பன்று, வேதனை உண்டாகிறது மக்களுக்கு.

   இத்தகைய சூழலுக்கிடையேதான் க வி ஞ ர்             

முடியரசனின் கவிதைகளும் வெளிவருகின்றன. அவை மக் கள் மன்றத்திலே மதிப்பும், பரிசும்,மட்டற்ற வரவேற்பும் பெற்ற பிறகே வெளிவருகின்றன என்பதில் நமக்கு மகிழ்ச்சி பிறக்கிறது. வளர்ந்து வரும் வாழைத் தோட்டத் தில் ஒரு செவ்வாழையாக, வான்புகழ் சேர் தமிழ் இலக்கியப் பேரேட்டில் வரவுகலமாக, வையகமே எதிர்நோக்கும் தமிழ்த்தாயின் தண்ணளியில் முன்னணியில் இடம் பெற்று விட்டார் முடியரசன் என உணரும்போது நாம் பூரிப்படைகிறேம், வாழ்த்துகிறேம்!

   நிமிர்ந்த தோற்றம், மலரும் முகம், கவர்ச்சி தரும்                

மீசை, துருவும் கண்கள், சுருண்ட முடி இவற்றுடன் திறந்த நெஞ்சம், சிந்திக்கும் பழக்கம், சிரிக்க வைக்கும் பேச்சு, பழகும் பண்பாடு-இவர்தான் முடியரசன். அவர் தோற்றத்தை அப்படியே அவர் கவிதைகளிலும் காணும் போது அன்று முடியரசர் நாட்டிலே தமிழ் வளர்ந்தது, இன்று முடியரசன் நாவிலே தமிழ் வளர்கிறது என்று சொல்லத் தோன்றுகிறது.

  "இலக்கணம், சீர், தளைகட்குக் கட்டுப்படாதவனே             கவிஞன்' என வால்ட்விட்மன் கூறியதாக, தமிழ் இலக்         

கணத்தைத் தாறுமாறக்கிக் கொண்டு வளர்ந்து வருகிறது