பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

̣̣̣̣̣̣

ஆறு

எண்சீர் விருத்தம்

                       1

பகல்முழுதும் வெயில்காய்ந்து மேற்பால் சேரும்
ːːபகலவனை-வழியனுப்பிக் கீழ்ப்பால் திங்கள்
முகமெழுப்பும் வேளைதனில் மகிழ்வு கூட்ட
ːːமுரணில்லா யாழெடுத்தாள் காதல் நல்லாள் ;
முகம்சுழித்தேன் , ஏனென்ருள் ?', 'கவிதை யாக்க
ːːமுயல்கின்றேன் நீபாட முனைதல் நன்றே ?
தகவிதுவோ ? எனவுரைத்தேன் யாழை வைத்தாள்"
ːː'தளிர்க்கரத்தாய்! என்னுடன்வா' என்றழைத்தேன்
                        2
அவளுடன்நான் கற்பனையில் மிதந்து சென்றேன்
ːː"அத்தான்!ஒர் ஐயமுண்டு, செய்யுள் யாக்கக்
கவலைதரும் இலக்கணமேன் வேண்டும் ? என்ருள் :
ːːகாரிகையே ǃ ஆற்றுக்குக் கரையேன் வேண்டும்?
சுவர்போலும் கரையிலேயேல் ஆற்றின் தன்மை
ːːஎன்னுகும் சொல்லிடுக ! ஊர்பாழ் அன்ருே ?
அவமின்றி மொழிவிளங்கக் கவிதை என்னும்
ːːஆற்றுக்கும் இலக்கணமோர் கரையே யாகும் ;

                        39