பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஊரெலாம் பேரொலி ஓங்கி உயர்ந்தது: மூன்று நாட்கள் எங்கும் முழக்கம் : 20 உலாமுடித் தேகினள் ஊரெலாம் ஒய்ந்தது ;

ஆயினும் வெவ்வே ருர்ப்பொலி எழுந்தன ;
மண்ணிற் புதைந்த மகவைத் தோண்டிய
தாங்கொணுத் துயரால் தாயர்தம் கதறல்
கைககால் இழந்தோர் கதறும் அழுகுரல்     25

வீடுகள் இழந்தோர் விளைத்திடும் கூக்குரல்

மாடுகள் ஆடுகள் மாண்டன என்றே
ஏழை மாந்தர் எழுப்பிய அலறல்
சிதைந்த கோலங் காணச் செல்லும்
சிறுசிறு குழுவினர் செய்திடும் பேரொலி     30  

சிதைந்த குடில்களைச் செப்பஞ் செய்வோர்

எழுப்பொலி அனைத்தும் எழுந்து பரந்தன:
அண்டையில் நின்ற மரங்கள் அனைத்தும்
தம்சிறு குடிலைத் தகர்த்ததை எண்ணிச் 

சிற்றங் கொண்டார் போலச் சிற்சிலர் 35

துண்டு துண்டாய்த் துணித்தனர் உறுப்பினே 

முண்டமாய்க் கிடந்தன முழுமரம் அனைத்தும் :

பள்ளிகள் பற்பல பாழாய் நின்றன :
எங்கும் சிதைந்தும் அழிந்தும் இருந்தன:
இல்லம் இழந்த எளியோர் சிந்திய           40
கண்ணிர் மழைநீர் கலந்து  பரவின :

இழப்பொலி இழப்பொலி எங்கும் ஒலித்தன;

அந்தோ அந்தோ அவலம் 
இயற்கை அரசியின் எழுச்சிப் பயனே !  
                     53