பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 நீரின் விந்தைகள்
நீரால் விளைத்திடும் விந்தைகள் எத்தனை!
நேரிற் காணின் அல்லது நிலைமையைப்
பாரித் துரைக்கப் பற்றுமோ ஒருஙாு?20
ஆயினும் ஒருசில அறைகுவன் கேண்மின்!
உரமிலா உள்ளத் தொருவன்மற் ருங்கே
மருவு மவர்தம் வயமே யாகி
இயங்குதல் உலகத் தியற்கை அதுபோல்
தனக்கென ஒருநிுறம் இல்லாத் தண்ணிர்25
மினுக்கிடும் பலநிிற விளக்கொளி சார்தலால்
அதன தன் நிறமாய் அழகொளி காட்டிப்
புதுவிருங் தளிக்கும் போமவர் விழிக்கே!
நாடக அரங்கில் நாலுந் திரையெனப்
பாடொலி அருவிப் பாய்ச்ச லோவெனப்30
பலவகை நிறநீர் பாங்குடன் இறங்கிச்
சலசல ஒலியுடன் ஒடும் ஒருபால்:
குற்றப் பட்டோர் கொடுஞ்சிறை யதனுள்
உற்றிடல் போல ஒருபால் அந்நீர்
தொட்டிச் சிறையுள் துளங்குதல் இன்றிக்35
கட்டுப் பட்டுக் கிடப்பது கண்டேன்;
ஊற்றுக் குழல்நீர்
ஊற்றுக் குழல்நீர் காட்டும் வித்தை
வேறொரு ரிடத்தும் கண்டே னல்லேன்;
விரிகுடை யோவென ஒருபாற் காணும்,
வரிசிலை யோவென ஒருபால் வளையும்,40
இனிமேல் தனிமை ஏலேன் என்றே
அணிமைத் தொட்டி யகத்துள் வீழ்ந்து
மாயும் ஒருபால்,மற்றொரு பாங்கர்ப்

55