பக்கம்:முடியரசன் கவிதைகள்-1.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணுென்ருல் காவியத்தை ஆக்கிக் காட்டும் காரிகையார் நடையுடையில் எழிலின் தேக்கம், மண்தின் ருல் தீமை என அறியாப் பிள்ளே மழலைமொழிப் பார்வைகளில் எழிலின் ஒட்டம், விண்சென்று மீளுகின்ற பட்டம் விட்டு வி&ளயாடும் சிறுசெருவில் எழிலின் பாய்ச்சல், தண்ணென்ற புனலோடைச் சலச லப்பில்

தகுமெழிலின் பளபளப்பு விளங்கக் கண்டேன் (ங்)

சுடர்விட்டுக் காட்டுகின்ற கதிரோன் தோன்றக் சுருக்கவிழ்ந்து சிரிக்குமுகத் தாம ரைக்குள் கடன் பட்ட மாந்தரிடம் வட்டி கேட்கக் கடைதோறும் புகுந்துவரும் கணக்க ஃனப்போல் இடம்விட்ட மலர்தோறும் சென்று தேனே இனிதுறிஞ்சி இசைபாடிச் செல்லும் தும்பி அடைபட்டுக் கிடக்கவெனக் குவிந்து கொண்ட அல்லிமலர்க் கூட்டத்துள் அழகு கண்டேன் (ச)

விண்பரப்பில் மீன் நடுவே ஒளியைக் கான்று மென்னடையில் கிலவுப்பெண் ஊர்ந்து செல்ல, மண் புரக்கும் வேலியென அமைந்த வேலை மடிந்துமடிந் தலே எழுப்பிக் கரையில் மோத, மண்பரப்பில் எழுப்பியுள வலைஞர் சிற்றில் மனேவியின் பால் விடைபெற்றுத் தோணி ஏறிக் கண்மறைக்கும் நெடுந்தொலைவு கடலுள் ஏகிக் கடும்புயலும் சுறவினத்தின் வாயும் 'தப்பி, (டு)

17