பக்கம்:முடியரசன் கவிதைகள்-1.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிலவு

ஒளிமிகுந்த குளிர்கிலவே ! உன்னைக் கண்டேன் உள்ளமெலாம் உவகையுற இன்பங் கொண்டேன்; களிமிகுந்த காதலருக் கின் பத் தோணி ! - கடைந்தெடுத்த வெண் முத்தம் நின்றன் மேனி , தளிர்போலும் குழவிகளின் கதறல் நீக்கும் தாயர் தமக் குதவிடுவாய் ! உலகைக் காக்கும் எளிமைமிகு தொழிலாளர் அயர்ந்த போது எழுந்துமுகம் காட்டிமகிழ் வூட்டும் மர்து / (இ)

ஒருபொழுதும் வயிருர உண்ணல் காணு துயிர்கிற்க இரந்துண்ணும் ஏழை, திங்கள் வருபொழுது அரைவயிறு மட்டும் உண்டு வருந்துகிற உழைப்பாளி, நிறைய உண்ணும் பெருவயிற்றுப் பணக்காரன் யாவ ரேனும் பிழையாது நிலவளித்து மாட மீதும் சிறுகுடிசை மீதுமொளி வீசி இன்பம் சேர்க்கின்ற பொதுவுடைமை ஆட்சி கண்டேன் (உ.)

20