பக்கம்:முடியரசன் கவிதைகள்-1.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவலன் தன் கவிப்பொருளேப் பாடுங் காலேப் பாட்டகத்தே இலக்கணமும் அமைதல் வேண்டும் ஆவல்கொண்டு கவிபுனேவோர் இலக்க ணத்தை அருகில்வைத்துப் பெருங்கவியாய் எண்ணிக்கொண்டு தாவுகின் ருர் பாடுதற்குத் தவறி வீழ்ந்து தகு புலவோர் இலக்கணத்தைப் புதைத்து விட்டுக் கூவுகின்ருர் ஒப்பாரிக் குரலெ டுத்து; கொடுமையிது ! கவிஞன் தன் மரபும் அன்று ' (B.)

"பண்டிதர்வே றென்னசொல்வார்? தமிழை எங்கும் பரவவிட மனமில்லார்’ என கைத்தாள் ; 'அண்டவந்த பிறமொழியால் தமிழை நீங்கள் அயர்த்தடிமை ஏற்றிருந்த போது காத்துக் கொண்டிருந்த பண்டிதனேக் குறைசொல் கின்ருய்? குறைமதியைத் தலைக்கொண்டாய் ! கவிஞ னும்யார்?

பண்டிதன்தான், உளருதே ! மொழியாம் ஆற்றில் படிந்தெழுந்தால் உன் மடமை கரைந்து போகும்; (ச)

சிறு இதயத் துாற்றெடுத்து மேனி எங்கும் செழிப்பதற்குக் கிளேத்தோடும் குருதி யைப்போல் குறுகிடத்தே தோன்றிப்பின் நாட்டில் செல்வம் கொழிப்பதற்குக் கிளேத்தோடும் ஆறு வெற்பில் விறுவிறுக்க அருவியெனப் பாறை மீது வீழஅது கல்லாகி ஒட ஒடக் குறுமனலாய் ஒன்று திரிங் தொன் ரும் என்ற குவலயத்தின் பரிணும உண்மை காட்டும்; (டு)

28