பக்கம்:முடியரசன் கவிதைகள்-1.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேற்றிசையில் செந்நிறத்தைக் கதிரோன் பாய்ச்சும் வேளேயிலே அவ்வொளியை ஆறு தன்மேல் ஏற்றுனது மெய்வண்ணம் காட்டி, ஒவ்வோர் இடங்களிலே நெளிந்தோடி இடையைக் காட்டி, காற்றுநிறை வயல்களுக்குப் பிரிந்து சென்று காள்வருவாய்க் கால்காட்டி, ஒடை மீது காற்றுரசச் சலசலவென் ருேடுங் காலை களிகடஞ்செய் காற்சதங்கை ஒலியைக் காட்டி (சு)

கரையோரம் அலேக்கையால் வாரி விட்ட கருமணலால் சுருள்கூந்தல் காட்டி, வெள்ளே துரைசேரும் புனல் தள்ளும் சங்கி னத்தின் அதுண்சினேயால் பல்காட்டி, ஒடி ஒடி இரைதேடும் கயல்மீனுல் கண்கள் காட்டி, இறுமாந்து செல்லுங்கால் தன்பால் செந்தா மரையின்றி முகங்காட்ட முடியா ஆறு மாய்வதற்குக் கடல்நோக்கி ஓடு தல்பார் ! (எ)

ஊர்மக்கள் வெறுத்தொதுக்கும் கழிநீர் எல்லாம் ஓடிவந்து கலந்தாலும் மாசு நீங்கி ஊர்விட்டு நீங்குகையில் துாய்மை யாகி ஊர்ந்துசெலும் ஆறுகண்டு தமிழைக் காண்பாய் ! சார்பற்றுத் தனித்தியங்க வல்ல என்றன் தமிழ்மொழியில் பிறமொழிகள் கலந்த போதும் நேர்வுற்று மாசின்றி இயங்கும் பண்பை

கினேப்பூட்டும் ஆற்.அறுக்கு வாழ்த்துக் கூறு ! )إك (

29