பக்கம்:முடியரசன் கவிதைகள்-1.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆற்றங்கரைக் காதலி

ஆற்றங் கரையினிலே - ஒருநாள் ஆடி அமர்ந்திருந்தேன் காற்ற மலர் வீச - நடந்து நங்கை ஒருத்தி வந்தாள் கூற்றுநிகர் கண்ணுல் - என்னேயே கொல்வதுபோல் கடந்தாள் காற்றெனப் பின்தொடர்ந்தேன் - மெல்லிய கைம்மலர் பற்றிவிட்டேன் (க)

சட்டென கின்றுவிட்டாள் - மார்பில் சாய்த்துக்கொண் டங்குகின்றேன் விட்டுவிடும் என்ருள் - உயிரை விட்டிட நான்விரும்பேன் கட்டிய பெண்போல - என்பால் காதல்மொழி சொன்னிர் மட்டிலா.அன்பு கொண்டால் - மனத்தை மாற்ற லரிதென்ருள் (2-)

43