பக்கம்:முடியரசன் கவிதைகள்-1.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மந்திர மில்லாமல் ஒதும் மறையவர் இல்லாமல் சந்தனம் இல்லாமல் - தாலிச் சரடுமே இல்லாமல் அந்த இடம் மணந்தோம் சான்று அகமன்றி வேறில்லை தொந்தர வில்லாமல் - நாங்கள்

துணைவர்கள் ஆகிவிட்டோம் (.)

பஞ்சனே துரங்கிடுவேன் - தமிழால் பாடி எழுப்பிடுவாள் கொஞ்சு மொழிபேசி - வெந்நீர் குளித்திட வாருமென்பாள் நெஞ்சினில் அன்பொழுக - அப்பம் நெய்யொழுகத் தருவாள் வஞ்சி விடை தருவாய் - என்ருல் வாள் விழி காட்டிடுவாள் (*)

சென்றிடுவேன் அலுவல் - மனேயில் செய்வன செய்திடுவேன் ஒன்றும் மணியோசை - கேட்டு ஓடிடுவேன் அவள்பால் முன்றினில் கின்றிருப்பாள் - வாயின் முத்துக்கள் காட்டிடுவாள் கன்றிடத் தந்திடுவாள் முத்தம் கணக்கில் அடங்காவே (டு)

44