பக்கம்:முடியரசன் கவிதைகள்-1.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உன்னுருவே தோன்றுதடி!

உள்ளத்தில் படிந்துவிட்டாய் அழகுருவாய் ;

உணர்வுடனே கலந்துவிட்டாய் தமிழ்ச்சுவையாய்; கள்ளக்கண் பார்வையிலே சொக்கியதால்

கரைபுரண்டு வருகின்ற காதலாம்.அறு வெள்ளத்தில் புணையாவாய் என்றுனே நான்

வேண்டியதை மறுத்தனேயே! உயிர்நிலைக்கக் கள்ளத்தான் நம்பினும்.அம் மதுநிறைந்த

கைக்கிண்ணத் துன்னுருவே தோன்றுதடி ! (க)

கச்செதிர்க்கும் உன்மார்பு கலக்கியதோ ?

காட்டுமலர்ச் சிரிப்புத்தான் அசைத்ததுவோ? பச்சைமயில் சாயலுக்குப் பதைத்தேனே ?

படியவைத்த துன்னிசையோ ? அல்ல; உன திச்சைமிகும் பார்வையில்தான் கட்டுண்டேன் என் ஆசை மறுத்தனையே என் வாழ்வுக் கச்சாணி அனேயவளே! சோலைசெலின்

அங்கெல்லாம் உன் னுருவே தோன்றுதடி ! (உ)

46