பக்கம்:முடியரசன் கவிதைகள்-1.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழையடி வாழை......

தமிழ் ஒரு கவிதைப் பண்புள்ள மொழி. பாவலர்தம் நாவிலே பண்வளர்த்த மொழி. உலகிலே கவிதை பாடு வதற்கு எளிதில் வரும் மொழி தமிழ் ஒன்றுதான் !

ஆல்ை அ, ஆ அறிந்தவரெல்லாம் அறிஞர்களா கவும், க, கா தெரிந்தவரெல்லாம் கவிஞர்களாகவும் ஆக முடியுமா ? உயர்ந்த கருத்துக்களின் ஊற்ருகி, மொழிப் புலமையின் கரைகண்டு, கவிதை அருவி பாய்வதன்ருே கவிஞன் உள்ளம் ! சுருங்கச் சொன்னல் கவிதைபாடுவது குழந்தை பெறுவதுபோல. கருச் சிதையாமல் பிறக்க வேண்டும்; பிறந்த பிள்ளை கூன் குருடு நீங்கியதாக இருக்க வேண்டும்; ' இவன் தந்தை என்னேற்ருன் கொல் ?' என வையகம் வாழ்த்தவும் வேண்டும்.

நாட்டன்பை அடகுவைத்து. மொழிப் புலமைக்கு முற்றுப்புள்ளிவைத்து எண்ணியதெல்லாம் கருத்து, எழுதியதெல்லாம் கவிதையென்று கூறி விலை போகாக் கைச்சரக்கை வீதிவலம் வந்து விற்பதற்குப் பேரம் பேசு கிருர்கள் சில புதுமைக் கவிஞர்கள். புதுமைப் பித்தன் சொன்னதுபோல் மனைவி சோரம் போய்ப் பெற்ற பிள்ளை யைச் சொந்தப்பிள்ளையென்று கொண்டாடுபவர்கள் கவிதை உலகிற் பெருகிவிட்டார்கள். பிறர் கருத்தைத் திருடியும்,_பழங்கருத்தைத் திருப்பியும் எழுதிப் பிழைத் கிருர்கள் இந்தக் கவிதாமேதை"கள் பாரதியும், பாரதி தாசனும், கவிமணியும் பிறந்த நூற்ருண்டிலே இத்தகைய கவிதா விற்பன்னர்'களும் பிறந்து தருக்கித் திரிவது கண்டு வியப்பல்ல வேதனை உண்டாகிறது மக்களுக்கு.

இத்தகைய சூழலுக்கிடையேதான் கவிஞர் முடியர சனின் கவிதைகளும் வெளிவருகின்றன. அவை மக்கள் மன்றத்திலே மதிப்பும், பரிசும், மட்டற்ற வரவேற்பும் பெற்ற பிறகே வெளிவருகின்றன என்பதில் நமக்கு மகிழ்ச்சி பிறக்கிறது. வளர்ந்துவரும் வாழைத் தோட்டத் தில் ஒரு செவ்வாழையாக, வான்புகழ் சேர் தமிழ் இலக்கி பப் பேரேட்டில் வரவுகலமாக, வையகமே எதிர்நோக்கும் தமிழ்த்தாயின் தண்ண்ளியில் முன்னணியில் இடம்பெற்று விட்ட்ார் முடியரசன் என உணரும்போது நாம் பூரிப் படைகிருேம், வாழ்த்துகிருேம் !