பக்கம்:முடியரசன் கவிதைகள்-1.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோழி:காதல் மதுவா? கட்டழகன் யாரோடி ? ஈதென்ன விங்தை 1 எனக்குரைப்பாய் யாரென்று

தலைவி:தன்மானங் கொண்டோர், தமிழ்வீரர், நாட்டுமக்கள் நன்மானங் காக்க நயந்துதொண்டு செய்கின் ருர்: அன்னர்பால் என்னெஞ்சம் ஆழ்ந்ததடி சேர் ந்துறையும் கன்னுள்தான் கூடுமட்டும் கல்லுறக்கம் வந்திடுமோ ?

தோழி:போதுமடி உன் காதல் பொல்லாப்பு வந்துவிடும் தீதுபல நேருமடி தேசத்தார் துாற்றிடுவார் அன்பால் மணக்க அம்மான் மகனிருக்க வன்பாய் விரும்பேல் மறந்துவிடு மற்றவரை !

தலைவி:

காய்ச்சும் இரும்பு கவர்ந்திட்ட நீர்போல ஆச்சுதடி என்மனம் அன்பர் அவரிடத்தே நாட்டார்கள் காதல் நலமறியார் புல் லுரைக்கும் வீட்டார்கள் சொல்கின்ற வெற்றுரைக்கும் நானஞ்சேன் உள்ளம் விழைந்த ஒருவரை விட்டுவிட்டுக் கள்ளச் செயல்புரியக் கற்பறியா நல்லகுலப் பெண்ணென் ரு எண்ணினே நீ? பேதமையால் கூறுகின் ருய் கண்ணின் இமைபோலக் காப்பவளே ! என்னுளத்தைத் தொட்டார்க் குரியளாய்த் தோள்தோய்ந்து வாழலன்றிக் கட்டாயக் கல்யாணங் கண்டிப்பாய் நான் வேண்டேன் அஞ்சியஞ்சி வாழ்ந்த அரிவையர்கள் இந்நாளில் மிஞ்சிவிட்ட செய்கையினை மேல்நடத்திக் காட்டுகிறேன் என்றுரைத்துச் சின் ஞளில் ஏறனைய காதலனே மன்றலன்று கொண்டாள் மகிழ்ந்து.

53