பக்கம்:முடியரசன் கவிதைகள்-1.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொண்டவன் ஒர்நாள் அண்டையில் வந்து விளையாட் டுணர்வால் விடுதலை தந்தான் ; தலைகாட் டாமல் தப்பி ஓடிட முனைந்தேன் சிறகோ முறிந்தது கண்டேன், கினேந்தேன் நடந்தே நெடுங்கான் ஏக ; பிதுங்கும் பெருவிழி அச்சங் காட்டப் பதுங்கி வந்தது பாழும் பூனே : ஒதுங்கி நடப்பினும் உயிர்பெறல் அரிதென மீண்டும் சென்று கூண்டுள் நுழைந்தேன் மீளா அடிமை நேர்ந்தது மேலும் ; என்னிலை தானே இக்காட் டவர்க்கும் ! நன்னிலை தந்தான் நலமுயர் காந்தி விடுதலை என்றே வெளியில் வந்தனர் ; கெடுதலை உள்ளம் கிடைத்ததைச் சுருட்டும் சுரண்டல் பூனே துரத்தல் காணிர் ! இருண்ட வாழ்வு ஏகுவ தென்ருே ? பூனைகள் தொலையும் பொழுதுதான் என்ருே ? கொடுமை கொடுமை என்று

கூவிச் சலித்தது கூண்டுக் கிளியே!

57