பக்கம்:முடியரசன் கவிதைகள்-1.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உணர்வார் யாரோ?

Ο

உழைத்தேன். நன்ரு ய், உணவே இல்லை ; திளைப்போன் ஒருவன் தீயன செய்தே என்னுடற் குருதி இறைத்து விளந்த பெரும்பயன் பெற்றே பெரியோன் ஆன்ை ; அருமைத் தேனி அரிதின் ஒடிச் சேர்த்தனே தேனே ; சிதைத்தே ஒருவன் உண்டான் அந்தோ ! உன்போல் நானும் உள்ளேன் ; இதனே உணர்வார் யாரோ ? ஒருநாள் இங்கே திருநாள் என்ருர் ஆண்டவ ணுடனே ஐயரும் இருந்தார் அலுக்கத் தூக்கி அயர்ந்தேன்; பின்னர் சோறு கேட்டேன் சோம்பல் பயலே ! திமிரா உனக்கு திருட்டுத் தடியா ! பொறுடா " என்ருர் பூசுரர்; என்றன் தோளே முறித்த தோடுடைச் செவியன் அருகிற் சென்றே அப்பா ! என்றேன்

விதிவிதி ’ என்ருன் குறைமதி யோனே.

63