பக்கம்:முடியரசன் கவிதைகள்-1.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துன்பத்திலும் சுவை கண்ட தென்றல் உள்ளம், தாய்

காட்டு நிலைநினைத்தால் புயலாகிவிடுகிறது.

நல்ல தமிழ் நாட்டெழுந்த இந்திப் போரில்

தேட்டாளர் முகங்களிலே அறுத்தெறிந்த திருத் தாலிக் கயிற்றில் நான் எழிலைக் கண்டேன் !' ஆம். அது கணவனை இழந்த காரிகை கண்ணகிக்குச் சிலையெடுக்க நினைத்த சேரன் செங்குட்டுவனை, புலி யெனக் கிளம்பிப் பேர்ர் தொடங்கிப் புல்லர்களைப் புறங் காண வைத்த எழில், வீர எழில் !

வானத்து முழுமதியாள் வார்க்கின்ற நிலவொளியை, வையகத்துப் பொற்கொடியார் முகமலர்க்குப் பிறரெல் லாம் ஒப்பிட்டார். கவிஞர் முடியரசன் காண்பதோ,

' பொதுவுடமை ஆட்சியினை இரவுப் போதில் புரிகின்ற முழுமதியே ...... என்பது கவிஞருக்குப் பொதுவுடைமை ஆட்சியிலே உள்ள விருப்பத்தை அல்ல நான் சுட்டிக்காட்ட விரும்புவது, கருத்திலே உள்ள புதுமையை!

முடியரசனின் ஆறு மிகச்சிறந்த இலக்கியப்படைப்பு. தனிக் கவிதைகளிலே இரண்டாயிரம் ஆண்டுகளாக உயிர் பெற்று வாழும் சங்க இலக்கியம் போல் அது திகழ்கிறது.

ஆறு ஓடுகிறது, வேகமாக ஓடுகிறது. சிலம்பு தந்த இளங்கோ காவிரியின் சிலம் பொலியைச் சித் திரித்துக் காட்டியுள்ளார். முடியரசனும் ஆற்றைப் பெண்ணுக்கி அழகான தோர் கற்பனை செய்கிருர். அவளின் ஓட்டத்தைக் கண்டு கற்பனையாகச் சொல்கிருர் ஆசிரியர்,

"தன்பால் செந்தாமரைiன்றி முகங்காட்ட முடியா ஆறு மாள்வதற்குக் கடல்நோக்கி ஓடுதல் பார்!’ என்று. ஓடும் நீரிலே தாமரை பூக்காது என்ற உண்மையை, எவ்வளவு அழகான கற்பனையின் கரு வாக்கிக்கொண்டார் ஆசிரியர்! கம்பனையும்,பாரதியையும், பாரதிதாசனையும் வைத்துக்கொண்டு பார்த்துப் பார்த்துக் விதை பாடி, அவர்களின் கருத்தையும் வரிகளையும் சேர்த் துச் சேர்த்துச்செய்யுள் எழுதும் சில கரும வீரர்'களும் இந்த ஆற்றைப்போல் முகங்காட்ட முடியாமல் ஓடுவதைத்

睡 H

தான் நாம் காண்கிருேம்! ==