பக்கம்:முடியரசன் கவிதைகள்-1.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்றுரைத்தாள்; பெண்மயிலே 1 தமிழில் ஊறும் இன்பநிலை கண்டவர்கள் இந்த ஒன்றே கன்றென்பர்; நான்கூட அப்ப டித்தான் நடையழகி ! நானுன்னே மணந்து கொண்ட அன்றுன் பால் அழகிளமை நிறையக் கண்டேன் ஆண்பிள்ளே ஒன்றுபெற்று விட்ட பின்னர் இன்றுளதோ அவ்விளமை? ஆத லாலுன் இன்பத்தும் சிறுகுறைவு இருத்தல் உண்மை (B.)

மனிதரினம் முதன்முதலில் பேசக் கற்ற மாண்புயர்செந் தமிழணங்கோ என்ருல், இன்பம் கனிதெலுங்கு மலேயாளம் துளுவம் இன்னும் கன்னட மாம் எனுமக்கள் நான்கு பெற்றும் தனியிளமை குன்றவிலை தளர்வும் இல்லை தலைச்சிந்தா மணிசிலம்பு மேக லேப்பூண் நனியழகு பொலிவுபெற மனத்தை ஈர்க்க நடக்கின்ருள் சிரிக்கின்ருள் அந்த கங்கை (err)

ஆதலினல் தமிழின்பம் உயர்ந்த தென்ருர் அதற்கவரை வெறுத்துவிடல் அழகோ ? என்றன் மாதரசே எனவுரைத்தேன்; போங்க ளத்தான் மறைமொழியால் கேலிஉரைக் கின்றீர்!’ என்ருள்; காதலியே கேலியில்லே தமிழ்சு வைத்தால் கவலே எலாம் பறக்குதடி ! தளர்ச்சி நோயும் ஏதடி ?என் இன்ன முதே ! என்றன் உள்ளம்

இன் பத்துள் மூழ்குதடி ' என்று சொன்னேன்; (டு)

69