பக்கம்:முடியரசன் கவிதைகள்-1.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வானெலியில் நேற்ருெருவர் பேசக் கேட்டேன் வந்தசில ஐயங்கள் நும்பால் சொன்னேன் தேனெழுகும் மொழிபுகல் வீர் என்றி ருந்தேன் திட்டுகின்றீர் மன்னியுங்கள் அத்தான் ! என்ருள்; "நானெதுவும் திட்டவிலே, தமிழால் வாழ்வோர் நன்றிகொன்று திரிவதைத்தான் ஒப்ப வில்லை ஏைெதுக்கம் ? இப்படிவா ! எனக்கை பற்றி * எழுகின்ற ஐயங்கள் புகல்க’ என்றேன் (கூ)

கேட்கின்றேன் என்மீது சினங்கொள் ளாதீர் ? கிளர்மூச்சும் உடல்பொருளும் தமிழே, வாழும் நாட்களுமென் தமிழ்மொழிக்கே என்று சொல்வீர் ! ‘நன்று நன்று; நாம்மணந்த திருநாள் தன்னில் கேட்கவிலே தமிழ்ஒலியே எதையோ கேட்டோம் கிடக்கட்டும் நாம் வணங்கும் கோவி லுள்ளே கேட்கிறதோ அவ்வொலிதான்? பிள்ளே பெற்ருேம் கிறுக்கரைப்போல் பிறமொழியில் பெயரும் வைத்தோம்

இங்கிலேதான் போகட்டும் இந்த காட்டில் எங்கிருந்தோ வந்தமொழி நம்மை ஆளல் கன்னிலை என் றெண்ணிவிட்டோம் உணர்வும் அற்ருேம் நலம்பெறுமா உருப்படுமா தமிழ்தான் ? என்ருள்; என்னுளத்தே சுருக்கென்று தைத்த(து)ஆம் ஆம் எழுச்சியுரை முழக்கு கிருேம் செயலிற் காட்ட முன்வருதல் சிறிதுமிலே அந்தோ ! என்று முணுமுணுத்தேன் பேசவிலை வெட்கம்!வெட்கம்! (விக)

7|