பக்கம்:முடியரசன் கவிதைகள்-1.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கால் முளைத்த தாமரையின் மொக்குள் போலக் காட்சிதரும் குஞ்சுகள் - கோழிக் குஞ்சு களின் உருவத்திலே மட்டுமல்ல, கவிதையிலும் தெளிவு, உவமையிலும் புதுமை! ஆம், ஒவ்வொன்றும் ஒப்பற்ற் கவிதை. இயற்கைத் தாய் அற்புதமான படைப்பு, யாரும் கற்பனை செய்யாத கவிதை!

வாழும் நாட்டிலே பிறந்த கவிஞன் நாட்டின் வளத்தை யும், நலத்தையும் பாடுவான். சங்க இலக்கியம் அதற்குச் சான்று. அல்லற்பட்டு அவதியுறும் நாட்டிலே வாழும் கவி ஞன் ஆனந்தப் பண்பாடமாட்டான். குமுறும் நெஞ்சம் எரி மலையாக, கொதிக்கும் குருதி கொடுவாளாக, பெருமை குறைவது கண்டு பெருமூச்சுவிட்டு, கருத்தற்ற மக்களைக் கண்டு கண்ணிர்விட்டுப்பாடுவான். அவன் குரலிலே சோக மிருக்கும், கவிதையிலே கனலிருக்கும்,கருத்திலே எழுச்சி யிருக்கும். ஏன்? கவிஞன் காலம் காட்டும் கண்ணுடி என் கிருர்கள். அந்தக் கண்ணுடியிலே உண்மை உருவம் கண் டால், தங்கள் உருவம் தெரிந்தால் 'பிரச்சாரம், அரசியல்' என்று மழுப்பிக் கவிஞனைக் குறைத்து மதிப்பிடவும் துணிகிருர்கள். இத்திறய்ைவுப் பெரியோர்கள்ால்லதுசெய் யத் தெரியாவிட்டாலும், அல்லது செய்யாமல் அடங்கி யிருக்கலாம்.

சங்க இலக்கியம் ஒரு வாழைத்தோட்டம் என்கிருர் மு. வ. அத்தோட்டத்தில் வாழையடி வாழையெனப் பாரதி தாசனுக்குப் பிறகு முடியரசன் தோன்றியுள்ளார். இளம் வாழை, இனிக்கும் வாழை, ஈனும் வாழை இங்த வாழை! நல்ல எண்ணமும். நாட்டன்பும் கொண்டவர்க்கு நல் விருந்து, குடிகெடுக்கும் சூதுமதியினர்க்கு நல்ல மருந்து இவ்வாழை : அ ரு ங் து க என நான் சிபாரிசு செய்ய வரவில்லை. ஏன்? வண்ண நிலவை, வளர் கரும்பை, தெவிட்டாத தேனை, தித்திக்கும் கற்கண்டை,நலம் வளர்க் கும் மலை வாழையை, தீங்தமிழை உண்ண வருக என்று இதுவரை யாரும் சிபாரிசு செய்ததில்லை, அதல்ை!

":}

12-6-54 தமிழண்ணல்