பக்கம்:முடியரசன் கவிதைகள்-1.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்ணினமும் ஆணினமும் சமுதாயத்தின் பெருமைமிகு இருகண் கள்; பெண்மை என்னும் கண்ணுெளியைக் கெடுத்தனரே உலகோர் அங்தோ ! கருணை ஒளிர் தாயினத்தைத் தாழ்த்தல் நன்ருே ? எண்ணிவிடின் நோகின்ற தென்றன் நெஞ்சம் ஏனிந்த ஒரவஞ்சம் ? நேர்மை வேண்டும்; பெண்மை இன்றி ஆணில்லை அதல்ை பெண்மை பேணிடுக சமுதாயம் தழைக்க என் ருர் (GP)

பெற்றெடுத்த தமிழ்த்தாயின் பாலே உண்டோன் பெருமின்பம் உயரின் பம்; வீடு பேற்றை எற்றுக்காம் எனக் கருதச் செய்யும் அந்த இன்பமது என்ருர்,தாய் மொழியை நன்கு கற்றபிற கயல்மொழியைக் கற்றல் வேண்டும் கனித்தமிழை உயிர்த்தாயைத் தவிக்க விட்டு கிற்றல் பெரும் பிழைஎன் ருர் ! தாய் த விக்க கினேப்பாரோ எவரேனும் அறமே செய்ய ? (டு)

அன்புமிக்கார் ஆலுைம் அடிமை ஆகார், அறிவுமிக்கார் ஆயினுமே செருக்குக் கொள்ளார், பின்புமவர் பணிவுமிக்கார் இருந்தும் அன்னர் பெருமிதத்திற் கடுகளவும் குன்ருர், எங்கும் இன் புமொழி பேசினுமே கருத்து வேறு காணுங்கால் இடித்துரைக்கத் தவருர், நெஞ்சில் வன்பில்லார் எனினும்கல்ல உறுதி கொண்டார், வரும்ஆசை அற்ருர்தான் துறவி அல்லர் (சு)

79