பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

IC 4 "மிதப்ப' என்னும் பயனிலைக்கேற்ற சுரை: என்னும் சொல்லை, ஆழ’ என்னும் பயனிலைக்கு மாற்றிக் கூறப்பட்டுள்ளது. 'ரித்து என்னும் பயனிலைக்கேற்ற முயல்’ என்னும் சொல்லை, கிலே’ என்னும் பயனிலைக்கு மாற்றிக் கூறப்பட்டுள்ளது. கி2ல என்னும் பயனிலைக்கேற்ற யானை’ என்னும் சொல்லை, நீத்து என்னும் பயனிலைக்கு மாற்றிக் கூறப்பட்டுள்ளது. இங்கனம் மாற்றிக் கூறியபடி பொருள் கொள்ள முடியாது. எனவே, அம்மி ஆழ’ என் றும், சுரை மிதப்ப' என்றும் முயற்கு கீத்து என்றும் யானைக்கு கிலே’ என்றும் மொழி மாற் றிப் பொருள் கொள்ளுதல் வேண்டும். 'காடுகள் சூழ்ந்துள்ள காட்டை உடைய தலை வனது மலையின்கண் உள்ள சுனையானது, சுரைக் குடுக்கை மிதக்கத்தக்க இயல்பை உடையது; அம்மி ஆழத் தக்க இயல்பை உடையது; மலே போன்ற யானை கால் ஊன்றி கிற்கத் தக்க இயல்பை உடையது; முயல் நீந்தத் தக்க இயல்பை உடையது” என்பதே பொருளாகும். இலக்கண விதி : ஏற்ற இரண்டு பயனிலை களுக்குப் பொருந்தும் மொழிகளை, ஏலாத பய னி2லகளுக்குத் தனித்தனி கூட்டி ஒரடியுள்ளே கூறுவது, மொழி மாற்றுப் பொருள்கோள் எனப் படும்.