பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 அனேய, இகல, எதிர, சிவன, மலைய முதலான வையும் உவமவுருபுகளாக வரும்.) இலக்கண விதி : போல, புரைய, ஒப்ப, உறழ, மான, கடுப்ப, இயைய, ஏய்ப்ப, கேர, நிகர என்னும் செயவெனெச்சம் பத்தும், அன்ன, இன்ன என்னும் பெயரெச்சக் குறிப்பு இரண்டும், இவை போல்வன பிறவும் உவமவுருபுகளாம். போலப் புரைய வொப்ப வுறழ மானக் கடுப்ப வியைய வேய்ப்ப நேர நிகர வன்ன வின்ன என்பனவும் பிறவு முவமத் துருபே. (ந-நூற்பா 3 67.): பயிற்சி விளுக்கள் 1. வின எத்தனை வகைப்படும் ? வகைக்கொரு சான்று தருக. 2. விடை எத்தனை வகைப்படும்? வகைக்கொரு சான்று காட்டி விளக்குக. 3. இனமுள்ள அடைமொழி என்ருல் என்ன? இன மில்லா அடைமொழி என்ருல் என்ன? விளக்குக. 4. மோர்ப்பானை, பச்சரிசி, தென் குமரி, புன்செய்ப் பயிர்- இவற்றுள் இனமுள்ள அடைமொழிகள் எவை? இனமில்லா அடைமொழிகள் எவை? இனமுள்ளன அடைமொழிகளுக்கு இனம் எவை? 5. பொருள்கோள் என்ருல் என்ன?