பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
2

வல்லின மெய்யெழுத்தாகிய த் என்பது மார்பைப் பிறப்பிடமாகக் கொண்டு, மேல்வாய்ப் பல்லின் அடியை நாக்கு நுனி பொருந்தும் முயற்சியினால் பிறப்பது தெரியவரும்.

மெல்லின மெய்யெழுத்தாகிய ன் என்பது முக்கைப் பிறப்பிடமாகக்கொண்டு, மேல்வாயை நாக்கு நுனி மிகப் பொருந்தும் முயற்சியினால் பிறப்பது தெரியவரும்.

இடையின மெய்யெழுத்தாகிய ல் என்பது கழுத்தைப் பிறப்பிடமாகக்கொண்டு, மேல்வாய்ப் பல்லினடியை, நாவோரமானது தடித்து நெருங்கும் முயற்சியினால் பிறப்பது தெரியவரும்.

எனவே, எழுத்துக்களின் ஒலி வடிவப் பொதுப் பிறப்பிற்கு இடம், முயற்சி என்ற இரண்டும் காரணமாக அமைகின்றன என்பது தெரியவரும்.

இலக்கண விதி : ஒலி எழுத்தாகிய காரியத் திற்கு வேண்டும் காரணங்களில் சிறிதும் குறை வின்றி நிறைந்த உயிரினது முயற்சியினால், உள்ளே நின்ற உதானன் என்னும் காற்றானது எழுப்ப, அதனால் எழுகின்ற செவிப் புலனாம் அணுக்கூட்டம், மார்பும், கழுத்தும், தலையும், முக்கும் ஆகிய நான்கு இடங்களையும் பொருந்தி, உதடும், நாக்கும், பல்லும், மேல்வாயும் ஆகிய நான்கனுடைய முயற்சிகளால் வெவ்வேறு ஒலி எழுத்துக்களாகத் தோன்றுதல் அவற்றின் பொதுப் பிறப்பாகும்.