பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 படி அகரம் விகற்பமாய்ப் புணராமல், நிலைமொழி -ல வில் உள்ள அகரம் நீங்க நின்ற ல்-ற் ஆகத் திரிந்து புணர்தலும் ஒரோவழி உண்டு. (பிற என்ற மிகை விதிப்படி.) இலக்கண விதி: பல சில என்னும் இவ்விரு சொல்லும் தம் முன்னர்த் தாம் வருமாயின் இயல் பாகவும், வல்லினம் மிகுந்தும், கிலே மொழி ஈற் றில் உள்ள அகரம் கெட கின்ற ல்-ற் ஆகத் திரிந்தும் புணரும். இவற்றின் முன் பிறபெயர் கள் வந்து புணரும்பொழுது, ஈற்றில் உள்ள அகரம் கெட்டும், கெடாமலும் விகற்பமாய்ப் புணரும். பல சில வெனுமிவை தம்முன் ரும்வரின் இயல்பு மிகலும் அகர மேக லகரம் றகர மாகலும் பிறவரின் அகரம் விகற்ப மாகலு முள பிற. (ந-நூற்பா 170.) 2. பூ என்னும் சொல்லின் புணர்ச்சி பூ + கொடி = பூங்கொடி பூ + தடம் = பூந்தடம் பூ - சோலை = பூஞ்சோலை பூ + பணை = பூம்பனை மேற்கண்ட எடுத்துக்காட்டுக்களுள் பூ என் னும் சொல்லின்முன் கொடி, சோலை, தடம், பணை' என்ற சொற்கள் வந்து புணரும் பொழுது, வருமொழியில் உள்ள க், ச், த், ப் என்ற வல் லெழுத்துக்களுக்கு இனமாகிய ங்,ஞ்,ந்,ம் என்ற மெல்லெழுத்துக்கள் இடையில் தோன்றியுள் --HTT GÖT =