பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 11 பூ என்னும் பெயர்க்குமுன் வரு மொழியில் க, ச, த, ப என்ற வல்லினம் வந்து புணரும்பொழுது, வருகின்ற வல்லின மெய்க்கு இனமாகிய மெல்லின மெய்யெழுத்து இடையில் வந்து தோன்றும். இங்ங்னம் புணர்வதோடல்லாமல், இயல் பினும் விதியினும் கின்ற உயிர்முன் க, ச, த, ப மிகும்’ என்ற பொது விதிப்படி, பூ - கொடி = பூக்கொடி பூ + சோலை = பூச்சோலை பூ - தொட்டி = பூத்தொட்டி பூ + பொழில் = பூப்பொழில் எனவே, ! என, வரும் வல்லெழுத்தே மிக்குப் புணர்தலும் உண்டு. இலக்கண விதி: பூ என்னும் பல பொருட் பெயர்ச் சொல்லின் முன் க, ச, த, ப என்ற வல்லி னம் வரின், பொது விதிப்படி மிக்குப் புணர்தலே அன்றி, வருகின்ற வல்லினத்திற்கு இனமாகிய மெல்லினம் இடையே தோன்றப் புணர்தலும் உண்டு. பூப்பெயர் முன்னின மென்மையுந் தோன்றும். (ந - நூற்பா 200.) 3. தெங்கு என்ற சொல்லின் புணர்ச்சி தெங்கு + காய் = தேங்காய் தெங்கு என்ற பெயர்ச் சொல்லின் முன் "காய்' என்ற சொல் வந்து புணரும்பொழுது, கிலேமொழியாகிய தெங்கு என்பதில் உள்ள முதல்