பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 o தேன் என்ற சொல்லின்முன் முவின மெய்களும் வரப் புணர்ந்துள்ளமை தெரியவரும். அங்ங்ணம் புணரும்பொழுது, தேன்கடிது, தேன்ஞான்றது, தேன்யாது என அல்வழியிலும், தேன்கடுமை, தேன் மலிவு, தேன்யாப்ட் என வேற்றுமையிலும் முவினமும் வர இயல்பாகப் புணரும். ஒரோவழி, மெல்லினம் வந்து புணரும் பொழுது, தேன்மொழி என அல்வழியில் இயல் பாதலே அன்றி, ஈற்று ன் கெட்டுத் தேமொழி எனவும் புணரும். வேற்றுமையில், தேன் மலர் என இயல்பாகப் புணர்தலே அன்றி, ஈற்று ன் கெட்டுத் தேமலர் எனவும் புணரும். ஒரோவழி, வல்லினம் வந்து புணரும் பொழுது, தேன்குழம்பு என அல்வழியில் இயல் பாதலே அன்றி, ஈற்று ன் கெட்டு வருமொழி வல்லினம் மிகப் பெற்றுத் தேக்குழம்பு எனவும், அவ் வல்லினத்திற்கு இனமான மெல்லினம் மிகப் பெற்றுத் தேங்குழம்பு எனவும் புணரும். வேற்றுமையில், வல்லினம் வந்து புணரும் பொழுது, தேன்குடம் என இயல்பாதலே அன்றி, ஈற்று ன் கெட்டு வருமொழி வல்லினம் மிகப் பெற்றுத் தேக்குடம் எனவும், அவ் வல்லினத் திற்கு இனமான மெல்லினம் மிகப் பெற்றுத் தேங் குடம் எனவும் புணரும்.