பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 இவை தவிர, உரையிற்கோடல் என்ற வகை யில், விதியின்றி வருகின்ற தோன்றல், திரிதல், கெடுதல், நீளல், எழுத்து நிலைமாறுதல், சொல் நிலைமாறுதல் முதலாயினவும் செய்யுள் விகார மாகக் கொள்ளப்படும். அவற்றுள் சில வருமாறு: யாது - யாவது என வருவது தோன்றல் விகாரமாகும். கண்ணகல் பரப்பு - கண்ணகன் பரப்பு என வருவது திரிதல் விகாரமாகும். யானை - ஆனை என வருவது கெடுதல் விகாரமாகும். பெயர் - பேர் என வருவது நீளல் விகார மாகும். தசை - சதை என வருவது எழுத்து நிலை மாறுதல் விகாரமாகும். இல்வாய் - வாயில் என வருவது சொல் நிலைமாறுதல் விகாரமாகும். இலக்கண விதி: மெல்லொற்றை வல்லொற்றக் கலும், வல்லொற்றை மெல்லொற்ருக்கலும், குற் றெழுத்தை நெட்டெழுத்தாக்கலும், நெட்டெழுத் தைக் குற்றெழுத்தாக்கலும், இல்லாத எழுத்தை வருவித்தலும், உள்ள எழுத்தை நீக்கலும், செய் யுளிடத்து அடி, தொடை முதலானவைகளை கோக்கி அமைக்க வேண்டுமிடத்து வருவனவும் செய்யுள் விகாரமாகும்.